அவர் உண்மையான போலீஸ்காரர ஆவார்

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 02-

ஆடவர் ஒருவர் சாதாரண உடையில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளேட்டியை தடுத்து நிறுத்தி, வளைத்துப் பிடிப்பதைப் போன்று காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக பரபரப்பாக வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் மஞ்சள் நிற டி சட்டையில் துப்பாக்கியுடன் காணப்படும் நபர், போலீஸ்காரர் ஆவார். அவர் பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஆவார் என்று பினாங்கு, திமூர் லாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை 5.45 மணியளவில் பினாங்கு,ரெலாவ்- பகுதியில் ஆடவர் ஒருவரை மடக்கிப்பிடிக்கும் நபர், தன்னை போலீஸ்காரர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட வேளையில் மற்றொருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.

போதைப்பொருள் வைத்திருந்ததாக நம்பப்படும்
மோட்டார் சைக்கிளோட்டியை , பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்யும் நடவடிக்கையின் போது அந்த காணொளி பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

போலீசாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிளோட்டியை இரு போலீஸ்காரர்கள் பிடிக்க முற்பட்ட வேளையில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி முரட்டுத்தனமாக நடத்து கொண்டதாக ஏசிபி ரஸ்லாம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS