கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
வங்காளதேசத் தலைநகர் டாக்காவிற்கு முக்கியத்துவமற்ற பயணங்களை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்க வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து அந்நாட்டு மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று ஆருடம் கூற முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் டாக்காவின் பாதுகாப்பு நிலை குறித்து, அங்குள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்த வண்ணம் உள்ளது.
அவசியமற்ற பயணத்தை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடம் குறித்து மலேசிய தூதரகத்திடம் தெரிவிக்குமாறு விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.