புத்ராஜெயா,ஆகஸ்ட்02-
எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்கு பிறகு பொது பல்கலைக்கழங்கங்களில் சேர்வதற்கு விண்ணப்பத்து, இடம் கிடைக்காத நிலையில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு UPUonline மேல்முறையீடு விண்ணப்ப முடிவுகளை மனுதாரர்கள் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் மேல்முறையீடு முடிவுகளை UPUPocket செயலி வாயிலாக சோதித்து பார்த்துக்கொள்ளும் வேளையில் அதனை ஏற்றுக்கொள்வற்கு பதிலளிக்க வேண்டிய காலக்கெடு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையாகும் என்று உயர்கல்வி துணை அமைச்சர் முஸ்தபா சக்முத் தெரிவித்துள்ளார்.