மலேசியர் மனங்களில் நினைவுகூரப்படுவர்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 02-

பாரிஸ் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதியாட்டத்தில் தேசிய மகளிர் இரட்டையர் இணை சீனாவிடம் தோல்விக் கண்டனர்.

தேசிய மகளிர் இரட்டையர்களான பேர்லி டான் – எம்.தினா உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் சீனாவின் சென் க்கிங் சென் – ஜியா இ பேன்-யை எதிர் கொண்டனர்.

இவ்வாட்டம் மலேசிய நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.30க்கு தொடங்கியது.

20 நிமிடங்களில் நீடித்த முதல் சுற்று ஆட்டத்தில் பேர்லி டான் – எம்.தினா இணை 21-12 என்ற புள்ளியில் சீன இணையிடம் வீழ்ந்தது.

முதல் செட்டைக் கைப்பற்றத் தவறியத் தேசிய மகளிர் அணி இரண்டாவது செட்டை 21-18 என்ற புள்ளியில் சீன அணியை வென்றது.

வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் சென் க்கிங் சென் – ஜியா இ பேன் இணை 21-15 என்ற புள்ளி கணக்கில் மலேசிய அணியை வென்றது.

மொத்தம் 78 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் சீனாவின் சென் க்கிங் சென் – ஜியா இ பேன் இணை 21-12, 21-18, 21- 15 என்ற புள்ளிக்கணக்கில் மலேசிய இணை போராடி தோற்றது.

உலகத் தரவரிசையில் 13-ஆவது இடத்திலுள்ள நாட்டின் தேசிய மகளிர் இரட்டையர்களான பேர்லி டான் – எம்.தினா இணை தோல்வி, மலேசியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவ்விரு வீராங்கனைகளும் கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினர்.

எனினும் மலேசிய வரலாற்றில் ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியில் அரையிறுதி சுற்று வரை முன்னேறிய பேர்லி டான் – எம்.தினா இணை, மலேசியர்கள் மத்தியில் என்னெற்றும் நினைவுகூரப்படுவர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS