கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை மலேசியத் தினமும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இயல்பாக மாற்று விடுமுறை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் பிரதமர் துறைக்கும் இடையிலாான அரசமைப்பு, பொது உறவு அமைச்சரவை அகப்பக்கத்தில் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டு பொது விடுமுறை சட்டத்தின் கீழ் வேலை நாட்களில் பொது விடுமுறைக்கு உரிய இரண்டு நாட்களின் கொண்டாட்டம் ஒரே நாளில் வருமானால் மறுநாள் இயல்பாகவே பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எனினும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் பிரிதொரு நாளில் அரசாங்கம் அந்த விடுமுறையை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.