கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு சிறார்கள் உட்பட 20 அந்நிய நாட்டவர்கள், வளைத்துப்பிடிக்கப்பட்டுள்ளர். அத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட Tanzania- நாட்டைச் சேர்ந்த 24 வயது பெண், போலீஸ்காரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு குடிபெயர்வு, கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று காலை 10.30 மணியளவில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நடந்த இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் 2 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 14 நைஜீரியர்கள், Tanzania நாட்டைச் சேர்ந்த மூவர், உகாண்டாவைச் சேர்ந்த இருவர் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு இயக்குநர்ர Datuk Seri Mohd Shuhaily Zain தெரிவித்தார்.
பிடிபட்ட அனைவரும் தற்போது Wangsa Maju போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த அடுக்குமாடி வீட்டில் பணிபுரியும் ஒருவர், வெளிநாட்டுப் பிரஜைகள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகமாக நிகழ்வதாகவும், அவர்கள் பொது அமைதிக்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் புகார் அளித்து இருந்தார்.
தங்களுக்குள் நிகழும் தகராற்றுக்குப் பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து நிர்வாணக் கோலத்தில் வெளியேறும் சம்பவங்களும் நிகழ்வதாக அந்த தொழிலாளி தகவல் அளித்து இருந்தார் என்று Mohd Shuhaily Zain குறிப்பிட்டார்.