ஆகஸ்ட் 03-
சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் நடத்திய விளக்கமளிப்பு கூட்டத்தில் BERSIH உட்பட அரசு சார்பற்ற அமைப்புகள் கலந்து கொள்ள தவறிவிட்டன என்று தொடர்பு துறை அமைச்சர் Fahmi Fadzil குற்றஞ்சாட்டினார்.
ஆனால், அவரின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று Bersih கூறுகிறது. அந்தக் கூட்டத்தில் BERSIH- வின் முக்கிய பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டுள்ளார் என்று பெர்சே தலைவர் Faisal Abdul Aziz கூறினார்.
இணைய பகடிவதை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வு அலையை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் நாட்டில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சமூக ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் ஒரு கூட்டத்தை அண்மையில் நடத்தியது. இக்கூட்டத்தில் பெர்சே உட்பட சமூக அமைப்புகள் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்து இருந்தார்.