கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-
மலேசியத் தயாரிப்பிலான முதலாவது மின்சார வாகனத்தின் அறிமுக மாடல் பெயர் Proton e. MAS7 என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்படும் என்று நாட்டின் தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான Proton Holdings Berhad அறிவித்துள்ளது.
மலேசியாவின் கார் தயாரிப்பு வரலாற்றில் மற்றொரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் 40 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட Edaran Otomobil Nasional Berhad , முதல் முறையாக மின்சார வாகனத்தை அறிமுகப்பபடுத்தவிருக்கிறது.
2025 ஆம் ஆண்டில் புரோட்டோனின் SUV segmen C, e MAS7 வாகனம் சாலையில் பயணிக்கும்.
புதிய மின்சாரக் காரின் அறிமுகம் மற்றும் முழு வெளியீடு, இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் என்றாலும் இந்த புதிய மாடலின் பெயர் மற்றும் அதன் முன்னோட்டத்தின் அறிமுகம், நாட்டின் வாகனத் துறையை மிக நிலையான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதற்கு புரோட்டோனின் செயல்திறன் மிக்க அணுகுமுறை காட்டுகிறது என்று Proton Holdings Berhad நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புரோட்டோனின் புதிய மின்சார வாகன பிராண்டான e.MAS, கடந்த ஜுன் மாதம், கார் விற்பனைக்கான 18 டீலர்களை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் கார் 29 டீலர்கள் மூலம் மின்சார வாகனத்தின் கட்டமைப்பை அது விரிவுபடுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.