வீடு இடிந்து விழுந்து மாது மரணம்

குவந்தான்,ஆகஸ்ட் 03-

டிரெய்லர் லாரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள ஒரு வீட்டை மோதி தள்ளியதில், வீடு இடிந்து விழுந்தது. இதில் மாது ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 4.46 மணியளவில் குவந்தான், Pekan, Kampung Ketapang Hilir என்ற இடத்தில் நிகழ்ந்தது. பாதி சுவர், பாதி பலகை கட்டமைப்பைக் கொண்ட அந்த வீட்டில் ஐவர் குடியிருந்ததாக கூறப்படுகிறது.

இடிந்து விழுந்த வீட்டில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதற்கு முன்னதாக இடிபாடுகளுக்கு இடையில் மாது ஒருவர் சிக்கிக் கிடப்பதாக தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த ஐவரில் இருவர் உயிர் தப்பியதுடன், மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டது

மீட்கப்பட்ட மாதுவின் சடலம், சவப்பரிசோதனைக்காக Pekan மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS