சிறார்களின் தந்தை குற்றஞ்சாட்டப்படுவார்

பூச்சோங்,ஆகஸ்ட் 03-

தனது இரண்டு சகோதர்களை பக்கத்தில் அமர செய்து, தனியொரு நபராக காரை செலுத்தி, பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய பூச்சோங், Taman Putra Impian பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனின் தந்தை, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

அந்த மூன்று சிறுவர்களுக்கு மட்டுமின்றி சாலையை பயன்படுத்தும் பொது மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அந்த 12 வயது சிறுவன் காரை செலுத்தும் அளவிற்கு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதற்காக அந்த சிறுவனின் தந்தை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்.

ஒரு வர்த்தகரான அந்த சிறுவர்களின் 53 வயதுடைய தந்தையை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் அலுவலகம் அனுமதி வழங்கியருப்பதாக Sepang மாவட்ட போலீஸ் தலைவர் ACP Wan Kamarul Azran Wan Yusof தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் 39 பிரிவின் கீழ் மூன்று செக்‌ஷன்களின் அடிப்படையில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தனது இரண்டு வயது மற்றும் நான்கு வயது தம்பிகளை அழைத்துக்கொண்டு மேற்கண்ட வீடமைப்புப்பகுதியில் அந்த 12 வயது சிறுவன் காரில் வலம் வந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சிறுவனின் செயல், மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று பலர் கண்டனம் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS