கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-
கோலாலம்பூர் மாநகரின் சொர்க்கப்புரி என்று வர்ணிக்கப்படும் Bukit Bintang- கில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்து, கூச்சலும், குழப்பமும் விளைவித்தாக நம்பப்படும் நைஜீரியா நாட்டுப் பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓர் ஆங்கிலேயரான 40 வயதுடைய அந்த நபர். நேற்று பின்னிரவு, Bukit Bintang, Jalan Changkat டில் குடிநுழைவுதுறையினர் நடத்திய திடீர் சோதனையின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தாக கூறப்படுகிறது.
கூச்சலும் குழப்பமும் விளைவித்ததற்காக அந்த நைஜீரிய பெண்ணுடன் அந்த ஆடவரும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.