வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 358-ஆக உயர்வு

கேரளா,ஆகஸ்ட் 03-

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று 4-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட இடங்களில் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் மீட்பு குழு தேடி வருகிறது. இதனிடையே, வயநாடு நிலச்சரிவில்சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 358-ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி 5-வது நாளாக நீடித்து வருகிறது. ராணுவம்,தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, நிலச்சரிவில் சிக்கிய 25 தமிழர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் இந்த தமிழர்கள் வசித்து வந்தனர். வயநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களில் 22 பேரும் வயநாட்டிற்கு சென்ற 3 பேரும் என மொத்த 25 தமிழர்கள் மாயமாகியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS