காரினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

ஜோகூர்,ஆகஸ்ட் 03-

காரை மோதிய, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் , கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். இவ்விபத்து ஜோகூர், Batu Pahat, Jalan Kluang Ayer Hitam-மில் 33.5 ஆவது கிலோமீட்டரில் நேற்று இரவு 10.15 மணியளவில் நிகழ்ந்தது.

Ayer Hitam சாலையின் இடது புறத்தில் ஓர் உணவு கடை வளாகத்திலிருந்து வெளியேறிய 44 வயது மாது செலுத்திய கார், Part Raja-வின் U- வளைவில் திரும்பிய போது அதே திக்கை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி, தவிர்க்க இயலாமல் அந்த காரில் மோதியதாக கூறப்படுகிறது.

பலத்த காயங்களுக்கு ஆளாகிய 25 இளைஞர் மரணமுற்றதாக Batu Pahat மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸ் துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS