யானையினால் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்

ஜோகூர்,ஆகஸ்ட் 03-

யானையினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாழி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலையில் ஜோகூர், கஹங் , கம்போங் ஸ்ரீ லுக்குடில் நிகழ்ந்தது. Masirah Soliman என்று அடையாளம் கூறப்பட்ட 60 வயது மூதாட்டி, காலை 8 மணியளவில் தனது ரப்பர் மர நிரையில் சுயநினைவின்றி கிடந்ததை அவருடன் அடுத்த நிரையில் வேலை செய்த ஓர் இந்தோனேசிய மாது கண்டுள்ளார்.

பின்னர் சகத் தொழிலாளர்களின் உதவியுடன் அந்த மூதாட்டி கஹங், சுகாதாரத்துறையின் கிளினிக்கிற்கு தூக்கிச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பால்மர வெட்டுத் தொழிலாளர்களுக்கு இடையூறு விளைவித்து வரும் யானைகளுக்கு எதிராக வனவிலங்கு, தேசியப் பூங்கா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS