பாஸ் சின்னத்தை பயன்படுத்துவது சரியான முடிவாகும்

கிளந்தான்,ஆகஸ்ட் 03-

கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட Nenggiri சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பெர்சத்து கட்சியை சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் Mohd Rizwadi Ismail-, பாஸ் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று அந்தக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் வர்ணித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் நிர்ணயித்துள்ள அளவுகோல்கள், இந்த இடைத்தேர்தலில் முக்கிய் கூறுகளாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடைத் தேர்தலில் Bersatu கட்சி சார்பில் போட்டியிடும் 41 வயது Mohd Rizwadi Ismail- ஒழுக்கம் நிறைந்த, ஆளுமைமிக்க வேட்பாளராக நோக்கப்படுகிறார் என்று முகைதீன் யாசின் புகழாரம் சூட்டினார்.

குவா மூசாங் தொகுதியை சேர்ந்த Mohd Rizwadi Ismail உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். வரும் இடைத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவாரேயானால் அவரால் சிறந்த சேவையை வழங்க முடியும் என்று முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் Mohd Rizwadi Ismail- யை எதிர்த்து பாரிசான் நேஷனல் சார்பில் கிளந்தான் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Mohd Azmawi Fikir Abdul Ghani போட்டியிடுகிறார்.

WATCH OUR LATEST NEWS