பாலிக் புலாவ், ஆகஸ்ட் 05-
பினாங்கு, பாலிக் புலாவ், ஜாலான் புக்கிட் கெந்திங்- கில் உள்ள தாய்லாந்து உணவகத்தில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் எட்டு மியன்மார் பிரஜைகளையும் , ஓர் உள்ளூர் ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஒன்பது பேரை கைது செய்வதற்கு முன்னதாக, இந்த கொலை தொடர்பில் பாலிக் புலாவ் – பகுதியில் OP கெஜம் கெந்திங் எனும் சிறப்பு சோதனை நடவடிக்கையை போலீசார் முடுக்கிவிட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒன்பது பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். விசாரணைக்கு ஏதுவாக ஒன்பதை பேரையும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.