போலிப் பதிவுகளை பரப்ப வேண்டாம்

கூளாய், ஆகஸ்ட் 05-

இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போலிச் செய்திகள் பரப்ப வேண்டாம் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பில் இந்த இடைத் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் நுண்ணறிவு தொழில்நுட்பமான AI ( ஏ.ஐ.) தவறாகப் படுத்தப்படுகின்றதா? என்பதை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அணுக்கமாக கண்காணித்து வரும் என்றும் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS