குவாந்தன்,ஆகஸ்ட் 05-
குறுகி காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை நம்பி, ஒரு போலீ முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த குடும்ப மாது ஒருவர், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 750 வெள்ளியை இழந்துள்ளார் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஓத்மன் தெரிவித்தார்.
தங்களின் முதலீட்டுத் திட்டம் Amanah Saham Nasional Berhad முதலீட்டு டிரஸ்ட் ( Trust ) திட்டம் என்று போலியாக முத்திரைக்குத்தி, அந்த மாது ஏமாற்றப்பட்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
பகாங், ஜெரண்டட்- டை சேர்ந்த 44 வயதுடைய மாது தொடக்க கட்டணமாக ஆயிரம் வெள்ளி முன்பணம் செலுத்தியிருக்கிறார். அந்த ஆயிரம் வெள்ளிக்கு 30 ஆயிரம் வெள்ளி ஆதாயம் கிடைத்து இருப்பதாக கூறி, அந்த மாது நம்பவைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஒரு லட்சத்து 44 ஆயிரம்வெள்ளி வரையில் போலி முதலீட்டுத் திட்டத்தில் அந்த மாது செலுத்தியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.