புத்ராஜெயா,ஆகஸ்ட் 05-
மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் ஒன்று, ஓடு பாதையிலிருந்து விலகியது.
இன்று பிற்பபகல் 4.09 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பயிற்சி விமான ஒருவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக அறிவிக்கப்பட்டது.
இதனை மலேசிய வான் போக்குவரத்து துறை தலைமை செயல்முறை அதிகாரி நோராஸ்மான் மஹ்மூத் உறுதிப்படுத்தினார். Piper PA28-181 என்ற அந்த விமானம், மலேசிய விமானப் பயற்சி கல்லூரிக்கு சொந்தமானதாகும். ஓடுபாதையிலிருந்து விலகி, நிலைக்குத்திய அந்த பயிற்சி விமானம், அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.