பிரதமரின் பதிவுகளை அகற்றுவதா? / பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் META

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05-

பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பல்வேறு உள்ளடக்கங்களைஇன்ஸ்டாகிராம்- மிலிருந்து அகற்றியிருக்கும் இணைய வலைத்தளங்களை நிர்வகிக்கும் பிரதான நிறுவனமான META, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

META என்று சுருங்க அழைக்கப்டும் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் Meta Platforms Incorporation-னின் மலேசிய பிரதிநிதிகளுடன் இன்று புத்ராஜெயா, ஊடக மற்றும் தொடர்புத்துறை வியூக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் META-விடமிருந்து மன்னிப்புக் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே- வுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இருக்கும் காட்சிகள், பிரதமரின் பதிவுகள், கருத்துகள் அனைத்தும் அகற்றப்பட்டது குறித்தும் META – விடமிருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

META உயர் அதிகாரிகளுடனான இந்த சந்தப்பின் போது, தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் மற்றும் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் தலைவர் முகமது சலீம் ஃபதே டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS