தெலுக் இந்தான்
பேராக், கோலா பிகாம், ஜாலான் தெலுக் இந்தான் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த HONDA CITY வாகனம் ஒன்று, கால்வாயினுள் பாய்ந்து தீப்பற்றியதில், அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்.
நேற்றிரவு மணி 10.35 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நிகழ்விடம் விரைந்திருந்த தெலுக் இந்தான் மற்றும் BIDOR -ரைச் சேர்ந்த தீயணைப்பு மீட்பு படையினர், சுமார் 98 விழுக்காடு வரையில் தீக்கிரையாகியிருந்த வாகனத்தில், தீயை அணைத்து, சடலத்தை மீட்டனர்.
பின்னர், மேல்கட்ட நடவடிக்கைக்காக சடலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.