பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 06-
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, தாமன் பாரமவுண்ட்-ட்டிலுள்ள 5 மாடிகள் கொண்ட அடுக்ககத்திலுள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில், 60 விழுக்காடு எரிந்த நிலையில் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மணி 5.42 அளவில் தகவல் கிடைத்து, தமன்சரா தீயணைப்பு மீட்பு படையினர் நிகழ்விடம் விரைந்தனர்.
சம்பந்தப்பட்ட வீட்டிலுள்ள படுக்கையறையில், 62 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டது. படுக்கை மற்றும் மெத்தை மட்டுமே எரிந்திருந்த நிலையில், தீ வேறு எங்கும் பரவியிருக்கவில்லை.
சம்பந்தப்பட்ட மூதாட்டி, அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள வேளை, அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றது.