கோலாலம்பூர், ஆகஸ்ட் 06-
உலகின் உயரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றவர்களுடன் பதக்கங்களை வெல்லாத போதிலும், நாட்டிற்காக போராட்ட குணத்துடன் விளையாடியவர்களையும் மலேசியர்கள் பாராட்ட வேண்டும்.
துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பதக்கங்களை வைத்தும் மட்டும் விளையாட்டாளர்களின் அடைவுநிலையை அளவிடக்கூடாது.
நாட்டிற்கு பதக்கங்களை பெற்று தரும் முயற்சியில், விளையாட்டாளர்கள் வழங்கிய கடும் உழைப்பு, போராட்டக்குணம் முதலானவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாரவர்.
பிரான்ஸ், பாரிஸ்- சில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில், 9 விளையாட்டுகளை உட்படுத்தி 26 விளையாட்டாளர்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பூப்பந்தாட்டங்கள் வாயிலாக மலேசியா இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.