ஜோகூர் அரசாங்கத்திற்கு எதிரான அமானா கட்சியின் கூற்று, பேச்சுவார்த்தைகளுக்கு வித்திடும்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 06-

ஜோகூர்-ரின் நடப்பு அரசாங்கம், ஒற்றுமை அரசாங்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை எனவும் ஊராட்சி மன்றங்கள், கிராம தலைவர்கள் முதலான பொறுப்புகளில், மாநில பக்காத்தான் ஹாராப்பான் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், ஜோகூர் அமானா கட்சியின் இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர் ஃபத்லி உமர் அமினோல்ஹுடா முன்வைத்திருக்கும் பகிரங்க குற்றச்சாட்டு.

அவரது அக்கூற்று, தேசிய முன்னணி -பக்காத்தான் ஹாராப்பான் இடையே பேச்சுகளை நடத்த வித்திடும் என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் இணைப்பேராசிரியருமான டாக்டர் மஸ்லான் அலி தெரிவித்தார்.

ஜோகூர்-ரில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹாராப்பான்-னுக்கு பகையாளி அல்ல. அவ்வகையில், ஃபத்லி உமர்-ரின் அக்கூற்று, அவ்விரு கூட்டணிகளும் பேச்சுக்களை நடத்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாக டாக்டர் மஸ்லான் அலி கூறினார்.

WATCH OUR LATEST NEWS