அம்னோ கோத்தா ராஜா கோரிக்கை, சிலாங்கூர் அமானா கண்டனம்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 06-

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், கோத்தா ராஜா நாடாளுமன்றம் அல்லது அதிலுள்ள ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கும்படி, செனட்டர் தெங்கு டத்தூஸ்ரீ உத்தாமா ஜாஃப்ருல் அஜீஸ் தலைமையிலான அம்னோகோத்தா ராஜா தொகுதி, பொதுவில் கோரிக்கையை முன்வைத்ததற்கு, சிலாங்கூர் அமானா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தொகுதி பங்கீடுகள் குறித்தும் வெற்றி பெற்ற கட்சி, அதன் தொகுதியை விட்டுக்கொடுப்பது குறித்தும் கூட்டணிகள் இடையிலான பேச்சுவார்த்தைகளில் கலந்துப்பேச வேண்டும் என சிலாங்கூர் அமானா கட்சியின் துணைத்தலைவர் அஜ்லி யூசோப் அறிவுறுத்தினார்.

தேர்தலில் போட்டியிடும் தொகுதியைக் கோரும் அதிகாரம் அனைவருக்கும் உள்ளது. ஆயினும், வெளிப்படையாக அதனை பேசுவதைவிட, பேச்சுவார்த்தைகளின் வழி முடிவு காணப்பட வேண்டும் என்றாரவர்.

WATCH OUR LATEST NEWS