சிலாங்கூர் பக்காத்தான் ஹாராப்பான், அம்னோ முடிவெடுக்கட்டும்

சிலாங்கூர் ,ஆகஸ்ட் 06-

சிலாங்கூர்,கோத்தா ராஜா நாடாளுமன்றம் அல்லது அதிலுள்ள ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை, அம்னோ கோத்தா ராஜா தொகுதி தலைவர் செனட்டர் தெங்கு டத்தூஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் அஜீஸ் கோரியுள்ள விவகாரம்.

அது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை, சிலாங்கூர் பக்காத்தான் ஹாராப்பான் மற்றும் அம்னோ தலைமைத்துவத்திடம் விட்டுவிடுவதாக, அம்மாநில பிகேஆர் மற்றும் அமானா கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஒற்றுமை அரசாங்கத்தில், அம்னோ-வும் பக்காத்தான் ஹாராப்பான்-னும் அங்கம் வகிப்பதால், ஜஃப்ருல் அஜீஸ் -சின் கோரிக்கை குறித்து தீர ஆராய வேண்டியுள்ளதாக, சிலாங்கூர் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஹலிமி அபு பக்கர் கூறினார்.

அதே கூற்றை முன்வைத்துள்ள சிலாங்கூர் அமானா கட்சியின் தலைவர் இஜ்ஹாம் ஹாஷிம், ஜஃப்ருல் அஜீஸ் -சின் கோரிக்கையை பரிசீலிப்பது சிரமம் என்றாலும், உயர்மட்ட தலைமைத்துவத்தின் முடிவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS