இணைய மூதலீட்டு மோசடியில் சிக்கிய முதியவர்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 07-

இணைய மூதலீட்டில் 90 விழுக்காடு வரை லாபம் அடைய முடியும் என்ற ஆசையில், 73 வயது முதியவர் தனது 655 ஆயிரத்து 109 ரிங்கிட் சேமிப்பு பணத்தை இழந்துள்ளார்.

இணைய மூதலீட்டில் அதிக இலாபம் ஈட்ட முடியும் என்று, டான் டெங் பூ என்ற புலனம் கணக்கின் வழி வந்த குறுஞ்செய்தியை நம்பி, பணத்தை முதலீட்டு செய்த அந்த முதியவர், பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று போலிஸ் புகார் அளித்ததுள்ளார்.

கடந்த இரன்டு மாதங்களில், , பாதிக்கப்பட்டவர் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதிக்குள், ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஒன்பது முறை பணப் பரிவர்த்தனை செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டிருப்பதாக வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் பல்வீர் சிங் மகிந்தர் சிங் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS