விபத்தில் 28 வயது இளைஞர் உயிரிழந்தார்

குவான்தான்,ஆகஸ்ட் 07-

பஹாங், குவான்தான், தாலி ஏர் 1 சாலை சந்திப்பில், ஒரு மோட்டார் சைக்கிளையும் ஒரு வாகனத்தையும் உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில், ஹோட்டல் ஒன்றின் பணியாளரான 28 வயது முஹம்மது ஹஸ்ரி சே ஹாரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு நேர்ந்த அந்த விபத்தில் சிக்கிய வாகன ஓட்டுநரான 22 வயது பெண், காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.

சம்பந்தப்பட்ட சாலை சந்திப்பில் உயிர் தப்பிய பெண் ஓட்டிச் சென்ற Perodua Bezza ரக வாகனம் வலது புறத்தில் வலைய முற்பட்டுள்ளது.

அச்சமயத்தில், எதிர் திசையில் இருந்து Yamaha Y15ZR ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவர் தவிர்க்க இயலாமல் வாகனத்தின் முன்பக்கத்தில் மோதியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS