ஜொகூர், ஆகஸ்ட் 07-
மஹ்கோட்டா மாநில சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான காலியிட குறித்த முடிவெடுக்கும் உரிமையை ஒற்றுமை அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பக்காத்தான் ஹாராப்பான் மற்றும் தேசிய முன்னனியிடம் ஒப்படைக்க வேன்டும்.
அந்த பரிந்துரையை, ஜொகூர் அங்கதான் மூட கெடிலன் (AMK)-கின் துணை தலைவர் முஹம்மது ஃபேசுதீன் முகமது புவாட் முன்வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மஹ்கோட்டா மாநில சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான காலியிடம் குறித்து ஜொகூரிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் பல சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து எழுவதைத் தவிர்க்க அந்த பரிந்துரை அவசியம் என்றும் அவர் கூறினார்.
அதோடு, பிரிவினையை ஏற்படுத்தும் மற்றும் ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தை ச்சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கைகளும் அல்லது அறிக்கைகளும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில்,மஹ்கோட்டாமாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் சார்ந்த சிறப்புக் கூட்டத்தை அம்மாநிலத்தின் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடத்தும் என்று கூறப்படுகிறது.