வாக்காளர்களைப் பாதிக்காது

குவா முசாங்,ஆகஸ்ட் 07-

தவறுதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அம்னோ தலைவர் டத்தூஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிட் வெளியிட்ட கூற்றை முன்னுதராணமாக வைத்து நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் மேற்கொள்கின்ற பிரச்சாரங்கள் வாக்காளர்களைப் பாதிக்காது என்று அம்னோ உயர் செய்ற்க்குழு உறுப்பினர் டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர், புக்கிட் ஜலீல்-ச் AXIATA ARENA-வில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற விடுதலை பேரணியில் தற்செயலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக முழக்கமிட்டதற்காகத் துணை பிரதமருமான டத்தூஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிட் மக்களிடம் மன்னிப்பு கேட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பல கூட்டங்களிலும் சந்திப்பிலும் கலந்து கொண்டு வருவதால், துணை பிரதமர் டத்தூஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிட் சோர்வு காரணத்தினால், தவறுதலாக அவ்வாறு முழக்கமிட்டதாக டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான் விளக்கமளித்துள்ளார்.

அதோடு, பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், டத்தூஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிட் அந்த விடுதலை பேரணியில் கலந்துகொண்டது தெளிவாக இருப்பதால், அந்த விவகாரம் ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS