புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-
அரசாங்க ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படவிருகின்ற புதிய சம்பளத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 47 விழுக்காடு வரையில் சம்பளம் உயர்த்தப்படவிருக்கிறது என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.
இதன் வழி நாடு முழுவதும் உள்ள அரசாங்க ஊழியர்களில் 6 லட்சத்த 92 ஆயிரத்து 828 பேர் தங்களின்புதிய சம்பள முறையில் கூடுதல் அனுகூலத்தை பெறவிருக்கினறனர் என்று தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
புதிய சம்பள முறையில் சம்பள உயர்வுக்கு தகுதி பெற்றுள்ள அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருக்கும் எவ்வளவு சம்பள விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்ற விவரம் அடுத்த வாரத்தில் அவர்களுக்கு தெரியவரும்.
புதிய சம்பள முறை, சம்பள உயர்வு தொடர்பாக விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படவிருப்பதாக ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டா்.
இந்த புதிய சம்பள முறையில் அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் 15 முதல் 47 விழுக்காடு வரை சம்பள உயர்வை பெறவிருக்கின்றனர் என்பதையும் அவர் விளக்கினார்.