புத்ராஜெயா, ஆகஸ்ட் 07-
அரசாங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக 55 வயது டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அரசாங்க தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த டான் ஸ்ரீ சுகி அலி- வரும் சனிக்கிழமையுடன் ஒப்பந்தக் காலம் முடிவதையொட்டி புதிய தலைமைச் செயலாளராக ஷம்சுல் அஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் சேவைத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்புப்பிரிவு தலைமை இயக்குநரான ஷம்சுல் அஸ்ரி , கடந்த 30 ஆண்டுகளாக பொதுச் சேவைத்துறையில் சேவையாற்றிய அனுபவத்தை கொாண்டவர் ஆவார்.
அமெரிக்கா, துல்சா ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்றவரான ஷம்சுல் அஸ்ரி, பல்வேறு அனைத்துலக பல்கலைக்கழங்களிலும் பட்டம் பெற்றவர் ஆவார். நிதி அமைச்சு மற்றும் பொதுச் சேவைத்துறை இலாகாவில் பணியாற்றிய பரந்த அனுபவத்தை ஷம்சுல் அஸ்ரி கொண்டுள்ளார்.