கேசாஸ் நெடுஞ்சாலையில் கொள்ளையிட முயற்சி; நால்வர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 08-

சிலாங்கூர், சுபாங் ஜெயா அருகே, ஷா ஆலம் நெடுஞ்சாலை – கேசாஸ்-சிலுள்ள எண்ணெய் நிலையத்தின் முன்புறம், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 4 உள்நாட்டு ஆடவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று அதிகாலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தை தொடர்ந்து,சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் கடும் குற்றச்செயலுக்கான சிறப்பு விசாரணை பிரிவு – D9 அதிரடி கைது வேட்டையை மேற்கொண்டது.

அதன் பலனாக, நேற்று மாலை மணி 5.30 அளவில், கிள்ளான் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில், 30 முதல் 41 வயதுக்கு உட்பட்ட அந்நால்வரும் பிடிபட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அந்நால்வர் மீது போதைப்பொருள் உள்பட பல்வேறு முந்தையக் குற்றப்பதிவுகள் உள்ளதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS