குவா மூசாங் , ஆகஸ்ட் 08-
கெளந்தன், நெங்கிரி சட்டமன்ற தொகுதியில், தேசிய முன்னணிக்கு பரப்புரைகளை மேற்கொள்ள, களத்தில் இறங்கும்படி, பாஸ் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மேன், டிஏபி கட்சிக்கு சவால் விடுத்தார்.
இடைத்தேர்தலை எதிர்கொள்வதில், அம்னோ சிரமத்தை எதிர்நோக்கிவரும் நிலையில், அக்கட்சிக்காக டிஏபி களத்தில் இறங்காதது, அதனுடைய நட்புறவை பிரதிபலிக்கவில்லை.
மேலும், நெங்கிரி சட்டமன்ற வாக்காளர்கள், டிஏபி கட்சியினரின் முகத்தை காண, ஆர்வத்தில் உள்ளதாக துவான் இப்ராஹிம் கூறினார்.
நெங்கிரி இடைத்தேர்தலுக்கான பரப்புரையில், அம்னோ கேட்டுக்கொண்டால் மட்டுமே, DAP கட்சி களத்தில் இறங்கும் என அதன் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக் இதற்கு முன்பு கூறியிருந்தார்.