கோலாலம்பூர், ஆகஸ்ட் 08-
இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெளந்தன், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி சார்பில் களம் காணும் அம்னோவுக்கு ஆதரவாக, ம.இ.கா. பரப்புரைகளில் களமிறங்காது என ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தொகுதியில், ஓர் இந்தியர் மட்டுமே வாக்காளராக உள்ளதால், அங்கு வாக்குகளை திரட்ட வேண்டிய வேலை, ம.இ.காவுக்கு இல்லை என்றாரவர்.
அதேவேளையில், ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேசிய முன்னணி களமிறங்கினால், அதன் வெற்றிக்காக, ம.இ.கா தேர்தல் பரப்புரைகளில் களமிறங்கும்.
அத்தொகுதியில், ஐயாயிரத்து 144 பதிவுப்பெற்ற இந்திய வாக்காளர்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், அங்கு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ம.இ.காவுக்கு உள்ளதை விளக்கினார்.