ஈப்போ , ஆகஸ்ட் 08-
ஈப்போ, தாமன் செம்பகா- வில் தம்முடைய பாதுகாப்பில் விடப்பட்டுள்ள இரண்டு வயது குழந்தை இறந்தது தொடர்பில் குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக 30 வயதுடைய அந்தப் பெண்ணை 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது 20 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த மாது விசாரணை செய்யப்பபட்டு வருகிறார்.
அந்த பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை, கடந்த திங்கட்கிழமை சுயநினைவு இழந்த நிலையில் கிடந்ததைத்தொடர்ந்து ஈப்போ, Raja Permaisuri Bainun மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது..
எனினும் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அக்குழந்தையின் உடலில் நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில், தடிமானப் பொருள் ஒன்றை கொண்டு, குழந்தையின் தலையில் அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் அஜிஸி மேட் அரிஸ் தெரிவித்தார்.