லஞ்ச ஊழலை இன மற்றும் மதப்பிரச்னையாக மாற்றுவதா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 08-

நாட்டில் இன மற்றும் மதப்பிரச்னையுடன் லஞ்ச ஊழலை தொடர்புபடுத்தும் சில தரப்பினரை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை இன்று கண்டித்துள்ளார்..

தங்களின் நலன் சார்ந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக லஞ்ச ஊழல விவகாரத்தை, சிலர் திசை திருப்பி வருகின்றனர் என்று துணை ஐஜிபி குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது நாட்டில் லஞ்சம் பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று அயோப் கான் தெரிவித்தார்.

இத்தகைய ஊழலை இனப்பிரச்னைகளுடன் தொடர்படுத்தம் சில தரப்பினரும் நாட்டில் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
லஞ்சம் கொடுப்பவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் அவர்கள் வினவுகின்றனர். காரணம், லஞ்சம் கொடுப்பவர்கள் பெரும்பகுதியின முஸ்லிம் அல்லாதவர்கள் என்பது அவர்களின் வாதமாகும்..

லஞ்சம் கொடுப்பவர்களையும், லஞ்சம் பெறுகின்றவர்களையும் ஒரு இன விவகாரமாகவே நோக்கப்பட்டு வருகிறது.

நாம் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால், உண்மையான இறை நம்பிக்கையுடைவர்களாக இருந்தால் நாம் லஞ்சம் வாங்க மாட்டோம், மற்றவர்களையும் குறை சொல்ல மாட்டோம் என்று அயோப் கான், தமது உரையின் பதிவை நேற்று தமது முக நூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

உங்களின் சமய நம்பிக்கையில் நீங்கள் பலவீனமாக இருக்கும் போது முஸ்லீம் அல்லாதவர்களை குறை சொல்லாதீர்கள் என்று அயோப் கான் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS