பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-
அரசப் மலேசியப் போலீஸ் படையில் மிகப்பெரிய மாற்றம் நிகழப் போவதாக செய்தி வெளியிட்டுள்ள மலேசிய கினியின் மூன்று நிருபர்கள் , புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் தன் ஸ்ரீ ரசருடுன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று ஊடகவியலாளர்களும் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தங்களின் வாக்குமூலத்தை அளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் படையில் நடக்கவிருக்கும் மிகப்பெரிய சீரமைப்பில் போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்னை, உள்துறை அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் பிரிவின் தலைமை இயக்குநராக பணியிடம் மாற்றப்படவிருக்கிறார் என்று அந்த அவர்கள் செய்தி வெளியிட்டு இருந்தனர்.
எனினும் இச்செய்தியை ஐஜிபி. வன்மையாக மறுத்துள்ளார். விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அந்த மூன்று நிருபர்கள் யார் என்ற விவரத்தை ஐஜிபி வெளியிடவில்லை.