இரண்டு சகோதர்கள் கடத்தல், ஐவர் கைது

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-

கடந்த திங்கட்கிழமை இரண்டு சகோதரர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு வெளிநாட்டவர் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரித்வான் நார் தெரிவித்துள்ளார்.

அந்த இரு சகோதர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்களின் 29 வயது சகோதரியிடமிருந்து காலை 8.45 மணியளவில் போலீஸ் புகார் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் அவ்விரு சகோதரர்களும் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கிள்ளான், பந்தர் புக்கிட் ராஜா-வில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தவிர அவர்களை கடத்தியதாக நம்பப்படும் உள்ளூரைச் சேர்ந்த மூன்று ஆடவர்களையும், இரு வெளிநாட்டவர்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS