கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-
மலேசிய சொல்லிசை கலைஞர், பாடகர், பாடலாசிரியர், பதிவு தயாரிப்பாளர் என பன்முக திறனைக் கொண்டுள்ள ஷேஷா சயாநாவின் படைப்பில், 3 பாடல்களை உள்ளடக்கிய யாத்தே இசை தொகுப்பு உருவாகியுள்ளது.
யாத்தே, லாலிபப்பி, உன்னை தேடுதே எனும் அம்மூன்று பாடல்களும் ரசிகர்களை நிச்சயம் ஆச்சரியமூட்டும்.
சயாநாவின் இந்த புதிய இசைத்தொகுப்பை இன்று தொடங்கி அனைத்து DIGITAL STREAMING தளங்களில் கேட்டறியலாம்.