கோலா சிலாங்கூர் ,
சிலாங்கூர், கோலா சிலாங்கூர், தாமன் பெந்தஹாரா எனும் குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்துள்ளது.
நேற்று முந்தினம் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதுடைய அவ்வாடவர், பக்கத்து வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, 60 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய ரொக்கம், நகைகளை களவாடியதாக கூறப்படுகின்றது.
வேலையிலிருந்து திரும்பிய 56 வயது பெண், தனது வீட்டில் கொள்ளை நிகழ்ந்துள்ளதை அறிந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் அவ்வாடவரை கைது செய்தது.