மச்சாங் , ஆகஸ்ட் 09-
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல் காரணமாக, மீண்டும் சிறைக்கு வரும் கைதிகளால், நாட்டில், பெரு நகரங்களிலுள்ள சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை பிரச்சனை கவலையளிக்கின்ற வகையில் உள்ளது.
நடப்பில், நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மொத்தம் 71 ஆயிரம் கைதிகளை மட்டுமே சிறைவைக்க முடியும். ஆனால், அந்த எண்ணிக்கையையும் தாண்டி, தற்போது 85 ஆயிரத்து 350 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக, தேசிய சிறைச்சாலைத் துறை கூறியுள்ளது.
கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களுடன் சிலாங்கூரிலுள்ள
சுங்கை பூலோ, காஜாங் உள்ளிட்ட சிறைகளில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அத்துறை கூறியது.