மலேசியாவில் தொழிற்சாலையைத் திறப்பதாக TESLA நிறுவனம் கூறியதில்லை

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 09-

அமெரிக்காவின் மின்வாகன தயாரிப்பு நிறுவனமான TESLA, மலேசியாவில் தொழிற்சாலையைத் திறக்கவிருப்பதாக, இதற்குமுன்பு எந்தவொரு அறிவிப்பையும் செய்திருக்கவில்லை என முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தூஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தெரிவித்தார்.

மலேசியா உள்பட தென்கிழக்கு ஆசியாவில் தொழிற்சாலைகளை திறக்கும் திட்டத்தை, TESLA கைவிட்டுள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தரவுகளின் அடிப்படையில், தாய்லாந்தைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்து TESLA நிறுவனத்திடமிருந்து, இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாததைச் சுட்டிக்காட்டிய தெங்கு ஜஃப்ருல், மலேசியாவின் மின் வாகன தயாரிப்பை ஊக்கப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையில், TESLA நிறுவனம் ஒரு பகுதியாக உள்ளதாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS