புத்ராஜெயா,ஆகஸ்ட் 09-
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான கொடூர தாக்குதல்களையும் ஈரானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலையும் வழங்கிவரும் இஸ்ரேலின் செயல்களை எதிர்க்கும் மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு, இஸ்லாமிய நாடுகளை உட்படுத்திய OIC அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை சவூதி அரேபியா, ஜேட்டா-வில் OIC அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை உட்படுத்தி அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், மலேசியாவின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்ட போது, OIC அமைப்பு ஆதரவு வழங்கியதாக, வெளியுறவு அமைச்சர் டத்தூஸ்ரீ முகமது ஹசன் கூறினார்.
காஸாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுகளை தோல்வி காண செய்யும் குறிப்பிட்ட தரப்பினரின் சதிநாச வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் OIC-யிலுள்ள உறுப்பு நாடுகளை முகமது ஹசன் கேட்டுக்கொண்டுள்ளார்.