புத்ராஜெயா,ஆகஸ்ட் 09-
ஜப்பான், KYUSHU தீவில், நேற்று 7.1 MAGNITUD அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மலேசியர்கள் எவரும் பாதிக்கவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை மணி 4.33 அளவில் ஏற்பட்ட அந்நிலநடுக்கம் குறித்து மேலதிக தகவலைப் பெறும் முயற்சியில், டோக்கியோ-விலுள்ள மலேசிய உயர்தூதரகம் அந்நாட்டு அமலாக்கத்தரப்புடன் ஒத்துழைத்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மலேசியர்கள், கடல் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும், அந்நாட்டு அமலாக்கத் தரப்பு வழங்குகின்ற உத்தரவுக்கு கட்டுப்படும்படியும் மலேசிய வெளியுறவு அமைச்சு, அதன் அறிக்கையின் வழி கேட்டுக்கொண்டது.