குவா முசாங் ,ஆகஸ்ட் 09-
இம்மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அரசாங்கத்தைச் சேர்ந்த தேசிய முன்னணி, அரசாங்கத்தின் தளவாடங்கள் அல்லது கேந்திரங்களைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ நசுருதீன் டாட் வலியுறுத்தினார்.
நடக்கவிருக்கும் இடைத்தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது. தவிர, அரசியல் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் அல்ல என அவர் கூறினார்.
நெங்கிரி இடைத்தேர்தல் முற்றிலும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியடத்தோ நசுருதீன் டாட் , கிளந்தான் அரசாங்கத்தின் தளவாடங்களும் கேந்திரங்களும் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்தப்படாது என்றார்.