ஜெம்போல், ஆகஸ்ட் 09-
தனது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜெம்போல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 மாத சிறைத் தண்டனை விவதித்தது.
20 வயதுடைய அந்த ஆடவர், மஜிஸ்ட்ரெட் நார்ஷாஸ்வாமி இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, தனக்கு எதிரான குற்றத்தை அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜுன் 22 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பண்டார் ஸ்ரீ ஜெம்போல், ஃபெல்டா ராஜா அலியாஸ் என்ற இடத்தில் அந்த 20 வயதுடைய இளைஞர் தனது தாயாருக்கு எதிராக இந்த பாதகத்தை புரிந்ததாக குற்றச்சட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் அந்த இளைஞரை ஜோகூர், பெர்மாய் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்துமாறு பிராசிகியூஷன் தரப்புக்கு மஜிஸ்ட்ரெட் நார்ஷாஸ்வாமி இஷாக் உத்தரவிட்டார்.