வீடு தீப்பற்றிக்கொண்டதில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 09-

ஜோகூர், பாகோ-வில் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் வயதான தம்பதியர் மற்றும் அவர்களின் பெண் பேரக்குழந்தை என மூவர் உயரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கம்போங் பாயா ரெடான், ஜாலான் செகோலா- வில் நிகழ்ந்தது. இதில் அந்த தம்பதியரின் மற்றொரு பேரக்குழந்தை தீக்காயங்களுக்கு ஆளானார்..

82 வயது முகமது நோர் முகமது யாசின், அவரின் 76 வயது மனைவி ஆரா அப்துல் ஹமீத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் 11 வயது பேத்தி நோராட்ரியானா நோர் ஹிஸ்யாம், / சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த தம்பதியரின் மற்றொரு பேத்தியான 14 வயது நோராசிமா முகமது ராதி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அந்த வயதான தம்பதியனரின் வீடு 85 விழுக்காடு அழிந்ததாக மூவார் தீயணைப்பு நிலைய கோமந்தர் முகமது ஃபட்லி இஸ்மாயில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS