கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-
கடந்த செவ்வாய்க்கிழமைகிள்ளான், பந்தர் புத்தேரி- அருகில் கேசாஸ் நெடுஞ்சாலையில் ஓர் உணவு விநியோகிப்பாளரை மிரட்டி பணம் பறித்ததாக நம்பப்படும் இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இரண்டு போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தங்களிடம் ஆயிரம் வெள்ளி ஒப்படைக்குமாறு அந்த உணவு விநியோகிப்பாளரை இரண்டு போலீஸ்காரர்கள் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. தன்னிடம் அவ்வளவு பெரியத் தொகை இல்லை என்று அந்த உணவு விநியோகிகப்பாளர் கூறியுள்ளார்.
அந்த ஆயிரம் வெள்ளித் தொகைக்கு பதிலாக அவர் சவாரி செய்த பணமான 90 வெள்ளியையும் ஒரு கடிகாரத்தையும் அந்த இரு போலீஸ்காரர்க்ள எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த சம்பவத்தை உறுதி செய்த சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் – அந்த இரு போலீஸ்காரர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.