பதின்ம வயது இளைஞர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

ஈப்போ , ஆகஸ்ட் 09-

வயது குறைந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

18 வயதுடைய அந்த இளைஞர், நீதிபதி ஹில்மியா யூசப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. கடந்த ஜுலை மாதம் காலை 5.30 மணியளவில் நான்காம் படிவ மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றம் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின்க கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS